87 ரன்னுக்கு சுருண்டது இந்தியா * ‘ஜூனியர்’ உலக கோப்பையில் ஏமாற்றம் | ஜனவரி 21, 2023
போர்ட்செப்ஸ்ட்ரூம்: ‘ஜூனியர்’ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்–6’ போட்டியில் இந்திய பெண்கள் அணி, 87 ரன்னுக்கு சுருண்டு தோற்றது.
தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நடக்கிறது. லீக் சுற்று முடிந்து நேற்று ‘சூப்பர்–6’ சுற்று போட்டிகள் துவங்கின. இதில் இந்திய அணி ‘குரூப் 1’ ல் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்ரிக்க அணிகளும் இதில் உள்ளன.
நேற்று தனது முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ஷபாலி வர்மா, ஸ்வேதா ஜோடி துவக்கம் கொடுத்தது. அனுபவ ஷபாலி 8 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்ற, திரிஷா 4, சோனியா 2 ரன்னுக்கு அவுட்டாகினர். அணியை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிச்சாவும் 7 ரன்னில் திரும்பினார்.
லீக் சுற்றில் அவுட்டாகாத ஸ்வேதா (29 பந்தில் 21 ரன்), நேற்று முதன் முறையாக அவுட்டானார். இந்தியா 54/5 ரன் என திணறியது. தொடர்ந்து பார்ஷவி (8), ஹிரிஷிதா (14), திதாஸ் (14) விரைவில் வெளியேறினர். இந்திய அணி 18.5 ஓவரில் 87 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.5 ஓவரில் 88/3 ரன் எடுத்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
